
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து தென்காசி நோக்கி ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த பேருந்தை காளிதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார் இந்நிலையில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் அம்பிளிக்கை அருக சென்ற போது ஆம்னி பேருந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. மேலும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அடுத்த சாலைக்கு சென்று கேரளாவுக்கு புண்ணாக்கு ஏற்றி கொண்டு சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
அடுத்ததாக திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும் லாரி மீது மோதி அடுத்தடுத்து மூன்று வாகனங்களும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காளிதாஸ் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து எழிலரசி, கார்த்திக் ராஜா, ரம்யா உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.