
கேரள மாநிலத்தில் உள்ள பொன்னானி பகுதியில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் திருச்சூர் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. சாலக்குடி பகுதியில் சென்ற போது முன்னால் ஒரு சொகுசு கார் சென்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சைரன் ஒலி எழுப்பிக் கொண்டே அந்த காரை பின் தொடர்ந்தார். ஆனால் காரின் ஓட்டுனர் கடைசி வரை வழி விடவே இல்லை. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களாக வழி விடுவது போல போக்கு காட்டி கார் டிரைவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு தொந்தரவு அளித்துள்ளார்.
அவரது இந்த சேட்டை ஆம்புலன்ஸில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவு எண்ணும் தெளிவாக பதிவாகி இருந்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் போலீசார் அந்த கார் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து உரிமையாளரின் வீட்டிற்கு நேரில் சென்று போலீசார் 2.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை அறிந்த நெட்டிசன்கள் அபராதம் விதித்தால் மட்டும் போதாது அதிகபட்ச தண்டனை கொடுத்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.