
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இந்த கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியும், வருத்தமும் தருவதாக கூறிய அவர், கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.