
திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் 2 1/2 வயது குழந்தை மீது சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷிகா ஸ்ரீ என்ற 2 1/2 வயதுடைய குழந்தை, அங்கன்வாடியில் தினசரி சென்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர்.
அவரது தாயார் சினேகா, குழந்தையை காலை அங்கன்வாடிக்கு அழைத்து செல்வதும், மாலை 3 மணிக்கு அழைத்து வருவதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் நேற்று மாலை குழந்தை சோர்வடைந்து வீட்டிற்கு வந்ததும், அதன் கழுத்தில் சூடு வைத்ததற்காக அடையாளங்கள் காணப்பட்டன.
இதுகுறித்து அக்குழந்தையின் தந்தை ராஜபாண்டிக்கு தெரியவந்ததும், குழந்தை அழுதபடி “ஆயம்மா கரண்டியால் கழுத்தில் சூடு வைத்தார்” என கூறியதாக சொன்னார்.
உடனடியாக செல்லம்மாள் என்ற அங்கன்வாடி பணியாளரிடம் இது குறித்து பெற்றோர் கேட்டபோது, குழந்தை சேட்டை செய்ததற்காக சூடு வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து ராஜபாண்டி, கன்னிவாடி போலீசில் புகார் அளித்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.