தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஓடிடி தளங்களில் ஆபாச காட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது . முதற்கட்டமாக அதிக ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்த 18 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. 19 இணையதளங்கள் 10 செயலிகள் மற்றும் 57 சமூக வலைதளங்கள் ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையும் மீறி ஒளிபரப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஓடிடி தளங்களில் ஆபாசம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.