தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய முதல் மாநாட்டினை வெற்றுக்கரமாக நடத்தி முடித்த நிலையில் மாநாடு முடிவடைந்து ஒரு மாத காலம் ஆகிறது. அதன் பிறகு நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல் மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு கட்சி அலுவலகத்தில் விருந்து கொடுத்ததோடு பரிசு பொருட்களும் வழங்கி கௌரவித்தார். நடிகர் விஜய் அடுத்த வாரம் சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறார். அவர் முதல் மாநாட்டின் போது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்தார். நடிகர் விஜயின் அரசியல் வருகை மிகப்பெரிய அளவில் பேசப்படும் நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமைவார் என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் முழு நேரமாக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும் விஜய் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேலூர் குடியாத்தம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதாவது வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் முன்னிலையில் எளிமையாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறி தமிழக வெற்றிக்கழகத்தினர் ஒரு வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் அந்த வீடியோவில் ஆரவாரம் ஆர்ப்பரிப்பு எதுவும் இல்லாமல் வெறும் மண் தரையில் அமர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கொடியை கையெழுந்தியவாறு நிர்வாகிகள் அமர்ந்து பேசி கொள்கிறார்கள். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.