பார்க்கும்போது அழகாகவும் அமைதியாகவும் தெரியும் கடல், உண்மையில் பல அபாயங்களை மறைத்துக்கொண்டும் உள்ளது. சமீபத்தில், ஆர்க்டிக் பெருங்கடலில் நடந்த ஒரு திகில் சம்பவம் இதற்குக் சிறந்த உதாரணமாக உள்ளது. அதாவது ஆர்க்டிக் கண்டத்தின் கடல் பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த ஆர்வலர்கள், கடலில் மிதந்துகொண்டிருந்த ஒரு பிரம்மாண்ட பனிப்பாறையின் மீது ஏற முயன்றனர். பாதுகாப்புக்காக கயிறுகள் மற்றும் சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தியிருந்தாலும், அந்த பனிப்பாறை திடீரென சாய்ந்து கடலில் மூழ்கியதால், அதில் இருந்த இருவர் தண்ணீரில் விழுந்தனர்.

இந்த சம்பவம் அருகில் படகில் இருந்தவர்களின் கண் முன்னே  நடைபெற்றது. அவர்கள் உடனடியாக எச்சரித்தும், பனிப்பாறை மிக வேகமாகக் கடலில் சாய்ந்ததால், அந்த இரு ஆராய்ச்சியாளர்களும் நேராக கடலுக்குள் இழுக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் கடல் மிகவும் அபாயகரமானது மற்றும் ஆபத்தானது எனவும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம் எனவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.