
கள்ளக்குறிச்சி விசாராய சம்பவத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்பு படுத்தி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டியிருந்தார். இதனை அடுத்து ஆர் எஸ் பாரதியின் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதேபோன்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு சென்ற அண்ணாமலை ஆர் எஸ் பாரதியின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆர் எஸ் பாரதியின் கருத்து எனக்கு பெரிய துக்கத்தை உண்டாக்கியுள்ளது.
அரசியலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வந்து மூன்று வருடங்களாகியும் இதுவரையும் யார் மீதும் எந்த வழக்கும் போடவில்லை தாண்டி சென்று விட்டது. ஆர்.எஸ். பாரதிக்கு சம்மன் அனுப்பப்படும். இந்த வழக்கு கடைசி வரை எடுத்து செல்வோம். இத்தனை ஆண்டுகளாக திமுகவை யாரும் எதிர்க்காமல் இருந்தனர். இந்த வழக்கில் ஆர் எஸ் பாரதியை சிறைக்கு அனுப்ப போகிறோம். அவரிடமிருந்து பெறப்போகும் ஒரு கோடி பணத்தை கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிட போவதாகவும் தெரிவித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.