மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் மைடோபி மாகாணத்தில் உள்ள இங்கான்கோ நகரின் பெமி ஆற்றில் இருந்து படகு ஒன்று 100 பயணிகளுடன் அருகே இருந்த மற்றொரு நகரத்திற்கு சென்றுள்ளது. ஆனால் அதிக பயணிகளுடன் சென்ற அந்த படகு நடு ஆற்றில் திடீரென கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீரில் தத்தளித்தவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 25 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலரது நிலைமை என்னவென்பது பற்றி தெரியாத நிலையில் தொடர் தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.