
நடிகை ஆல்யா மானசா ராஜா ராணி-2 சீரியலில் நடித்து வந்த சமயத்தில் கர்பமானதால் அந்த தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து குழந்தை பிறந்த பின் ஓய்வில் இருந்த அவர், இப்போது தன் உடல் எடையை குறைத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார்.

அண்மையில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியது. அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஆல்யா மானசா தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.