
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்டதற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, குடியரசு தின நாளில் ஆளுநரின் தேநீர் விருந்தில் நான் கலந்து கொண்டது மக்களவையின் மாண்பை காப்பதற்காக. இதில் அரசியல் பின் வாங்கலும் இல்லை. முன் வாங்கலும் இல்லை. எந்த சமரசமும் இல்லை.
அதன் பிறகு ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. சட்டப்பேரவையில் அன்று ஆளுநர் படித்தது அரசின் உரை. ஆகவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஆளுநர் படிக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உரையில் எந்த மாற்றமும் இல்லாமல் அவை குறிப்பில் இடம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று கூறியுள்ளார்.