
ஒலிம்பிக்கில் 53 கிலோ பிரிவில் இந்திய வீரரான ஆண்டிம் பங்கல் தோல்வியடைந்தார். பின்னர் தனது சகோதரியுடன் ஹோட்டலுக்கு சென்ற ஆண்டிம், தனது உடமைகளை எடுத்துக்கொண்டு தன்னோடு கிராமத்திற்கு சகோதரியையும் அழைத்து சென்றார். அங்கு ஆண்டிம் அங்கீகார அட்டையுடன் பலத்த பாதுகாப்பு சோதனை சாவடிகளை கடந்தார்.
பின் அதனை தன் சகோதரிகளிடம் கொடுத்து ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுப்பியுள்ளார். இதையடுத்து அவரது சகோதரி அங்கிருக்கும் அதிகாரிகளிடம் பிடிபட்டார். அதுமட்டுமன்றி ஆண்டிம் பயிற்சியாளர்கள் பகத் சிங் மற்றும் விகாஸ் மற்றொரு போலீஸ் வழக்கில் சிக்கியுள்ளனர். அதாவது இவர்கள் நேற்று கிராமத்தில் இருந்து தங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு டாக்ஸி மூலம் சென்றுள்ளனர். பின் ஹோட்டலை அடைந்ததும் ஓட்டுனருக்கு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் போட்டியின் விதியை மீறியதால் ஆண்டிம் பங்கல் மற்றும் அவரது குழுவும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதையடுத்து ஆண்டியும் அவரது சகோதரியும் நேற்று காவல் நிலையத்தில் இருந்தனர். மேலும் அவர்களை இந்தியாவிற்கு திரும்ப அனுப்ப முடிவு செய்துள்ளனர் .