
தினந்தோறும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும். அதனைப் போலவே ஒரு நபர் ஆள் கடலில் ராட்சச மீனுக்கு உணவு கொடுத்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஆழ்கடலில் ஒருவர் சுத்தியை எடுத்து சங்கு ஒன்றை உடைத்துள்ளார்.
அப்போது ராட்சசன் அந்த நபரிடம் வந்து நிற்கிறது. அந்த சங்கை உடைப்பதற்குள் பசியால் அந்த மீன் அவரிடம் பதறுகிறது. உடனே அவர் உடைத்து தருகிறேன் இரு என்பது போல் சைகை செய்து அந்த மீனை நகர்த்துகிறார். பின்னர் சங்கை உடைத்து அதிலிருந்து சதையை எடுத்து அந்த மீனுக்கு கொடுக்கிறார். அதை சாப்பிட்ட மீன் அங்கிருந்து நகர்ந்து செல்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
— CCTV IDIOTS (@cctvidiots) May 26, 2023