சிறு வயதில் பூங்காவில் ஊஞ்சல் ஆடிய அனுபவம் அனைவருக்கும் இருக்கும். உயரமாக ஆடி மகிழ்ந்தாலும், அதிக வேகத்தில் ஆடினால் ஊஞ்சல் தலைகீழாகச் சுற்றிவிடுமோ என்ற பயமும் இருந்திருக்கும். அந்த குழந்தை காலக் கனவை நனவாக்கியுள்ளார் வெளிநாட்டு இளைஞர் ஒருவர்.

அவர் ஊஞ்சலில் வேகமாக ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், இளைஞர் ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடிக்கொண்டே இருக்கிறார். பார்ப்பவர்கள் அனைவரும், அவர் நிச்சயம் 360 டிகிரி சுழற்சி செய்வார் என எதிர்பார்க்கின்றனர்.

அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இளைஞர் ஊஞ்சலில் 360 டிகிரி சுழற்சி செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த சிலர் தங்களது குழந்தை கால நினைவுகளை பகிர்ந்து கொண்டாலும், சிலர் இந்த செயல் ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Made You Smile (@made.youu.smile)