
இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான ஐபிஎல்-ன் சீசன் 18 வருகின்ற மார்ச் 22ஆம் தேதி 10 அணிகளுடன் தொடங்க உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? என்ற கேள்வி தற்போதே எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஜதராபாத் அணி தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சன்ரைசர்ஸ் ஜதராபாத் அணியின் பிளேயிங் லெவலை பார்க்கும்போது அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் அவர்களால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை கொடுக்க முடியும்.
பின்னர் மிடில் ஆர்டரில் உள்ள ஹென்ரிச் கிளாசன் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். மேலும் அடுத்தடுத்து வரிசையில் விக்கெட் கீப்பராக அபினவ் மனோகரும், கேப்டனாக பேட் கம்மின்சும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். முகமது ஷமி, ஹர்ஷல் படேல், ஆடம் ஜம்பா, ராகுல் சஹார் ஆகிய நான்கு பந்துவீச்சாளர்கள் மீதமுள்ள இடங்களில் இருப்பதால் இந்த அணியால் மற்ற அணிகளை எதிர்த்து சிறப்பான ஆட்டத்தை விளையாட முடியும். மேலும் இந்த அணி நல்ல ஃபார்மில் இருந்தால் இறுதிப் போட்டிருக்கு கூட செல்ல வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.