டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். இவருடைய கட்சியும் தோல்வியடைந்த நிலையில் பாஜக டெல்லியில் பல வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்சிதா கெஜ்ரிவாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் அரசியல் கட்சியில் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

தன் மகளின் திருமண நிச்சயதார்த்த விழாவின்போது அரவிந்த் கெஜ்ரிவால் புஷ்பா பட பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனம் ஆடினார். அதாவது புஷ்பா படத்தில் உள்ள சாமி பாடலுக்கு கெஜ்ரிவால் தன் மனைவியுடன் நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் வருகிற 18-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மகளுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.