
சேலம் ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவார்கள். ஆனால் தற்போது அப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் QR கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெரும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த வசதி சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, ஊட்டி உள்ளிட்ட 78 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பின் மூலம் அனைத்து பயணிகளும் எளிதாக டிக்கெட் பெற முடியும். இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவசியம் குறைகிறது. QR கோடை பயன்படுத்தி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் எளிதாக ரயில் டிக்கெட் பெறுவதற்கு இந்த அமைப்பு பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளங்கள் மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்ய முடியும்.
QR கோடை ஸ்கேன் செய்து பணமில்லா பரிவர்த்தனைகளை இந்த அமைப்பு எளிதாக்குகிறது. இதன் மூலம் பயணிகள் இரயில்வே டிக்கெட்டுகள், தள டிக்கெட்டுகள் ஆகியவற்றை எளிதாக வாங்க முடியும். இந்த வசதி சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.