அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெருவில் கார்த்திக்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மைத்துனர் சின்னதுரை உடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றார். பின் கார்த்திக் சமையல் பாத்திரங்களை எடுத்து கடையில் கொடுப்பதற்காக எதிரே உள்ள கடையின் முன்பு காரை நிறுத்தியுள்ளார். அப்போது கடையின் உரிமையாளர் சையது சலீம் என்பவர் காரை இங்கே நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தில் கடையின் உரிமையாளர் சையது சலீம், கார்த்திக்கின் கார் கண்ணாடிகளை நொறுக்கியுள்ளார். இதைப்பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் தெரிவித்தார்.
அந்த புகாரின் படி விரைந்து வந்த காவல்துறையினர் கடை உரிமையாளரிடம் விசாரித்த போது அவர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பாக அறிந்த கடை உரிமையாளரின் நண்பர் அப்பு என்ற தசரதன்(28), கார்த்திக்கிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கார்த்திக் மீண்டும் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து சலீம், தசரதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.