
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்தின் உள்நாட்டு விமானம், ஒரு சக்கரம் இல்லாமல் லாகூர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. கராச்சி நகரில் இருந்து புறப்பட்ட PK-306 என்ற இந்த விமானம், பின்புற சக்கரங்களில் ஒன்றை இழந்த நிலையில் லாகூரில் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தால் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கராச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படும் போதே சக்கரம் இல்லாமல் இருந்ததா? அல்லது புறப்பாடு அல்லது இயக்கி செல்லும் போது அது முறிந்து விழுந்ததா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் கராச்சி விமான நிலையத்தில் சக்கரத்திலிருந்த சில பாகங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விமானம் புறப்படும் போது சக்கரம் பழுதாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது,” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.