
அமெரிக்காவில் 2021 அக்டோபரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம், தாமஸ் டிஜே ஹூவரின்(36) வாழ்க்கையை மாற்றியமைத்தது. மாரடைப்பால் மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் அளித்தனர். இதனை தொடர்ந்து தாமஸின் இதயத்தை அகற்ற மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
அறுவை சிகிச்சைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது, சில செவிலியர்கள் தாமஸின் உடலில் சில அசைவுகளை கவனித்தும், அது முக்கியத்துவம் பெறாமல் அறுவை சிகிச்சை தொடரப்பட்டது. இதயத்தை அகற்றுவதற்காக கத்தி வைத்த வேளையில், தாமஸ் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சையை நிறுத்தினார்.
அதன்பின் மற்றொரு மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்ட தாமஸ், சுயநினைவுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர். இந்த சிக்கலான சூழ்நிலையில் தாமஸ் உயிர் பிழைத்தது, அவருடைய குடும்பத்தினருக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தங்கள் பணிகளை விட்டு விலக, அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. தாமஸ், மருத்துவர்கள் எதிர்பார்த்ததைவிட நீண்ட நாட்கள் உயிருடன் இருந்தார். இதுவரை நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.