
இதயமே இல்லாமல் வாழ்ந்த ஒருவர் பற்றி உங்களுக்கு தெரியுமா? கடந்த 2011-ஆம் ஆண்டு கிரேக் லூயிஸ் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு 55 வயது. Amyloidosis என்ற நோய் காரணமாக அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் செயலிழந்தது. இதனால் டெக்ஸாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் டாக்டர்கள் அவரது இதயத்துக்கு பதிலாக கருவியை பொருத்தி அவர் வாழ்வதற்கு சிகிச்சை அளித்தனர்.
அந்த கருவியின் மூலம் இதயம் இல்லாமல் உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தத்தை செலுத்த முடியும். நோயின் தாக்கம் காரணமாக உடலின் பிற உறுப்புகள் செயலிழந்தது. ஏப்ரல் மாதம் 2011-ஆம் ஆண்டு லூயிஸ் உயிரிழந்தார். கிட்டத்தட்ட 12 மணி நேரம் இதயம் இல்லாமல், இதய துடிப்பு இல்லாமல் வாழ்ந்த உலகின் முதல் மனிதர் அவர்தான்.