செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் இருந்து மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

செல்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியது. அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்காததால் தான் இது போன்ற அவலம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மழை பெய்யும் போது பேருந்துக்குள் மழை நீர் ஒழுங்குவதால் இருக்கைகளில் அமர முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். சில அரசு பேருந்துகளில் மேற்கூரை ஒழுகுவதால் குடை பிடித்துக் கொண்டும் சிலர் பயணம் செய்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து பேருந்துகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.