
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கோ சாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் இறந்துள்ளதாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி பரபரப்பு குற்றசாட்டினை முன்வைத்திருந்த நிலையில் இதனை தேவஸ்தானம் மறுத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்ற நிலையில் அவர்கள் பசு மாடுகளின் இறப்புக்கு காரணமானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சருமான ரோஜா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, துணை முதல்வர் பவன் கல்யாண் தர்மத்தை பாதுகாப்பதாக கூறிவரும் நிலையில் திருப்பதியில் அநியாயங்கள் மற்றும் தவறுகள் நடக்கும் போது அவர் வாய் திறக்காமல் அமைதியாக இருப்பது ஏன்.?
அவர் திசை திருப்பும் அரசியலை செய்து வருவதோடு தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதான் உங்க நேர்மையா.? பதவியும் சலுகையும் கொடுத்தால் இப்படித்தான் வாயை மூடிக்கொண்டு இருப்பாரா.? பசுக்கள் ஏன் இறந்தன என்பதற்கான காரணத்தை கண்டிப்பாக கூறவேண்டும். ஏழுமலையானுக்கு துரோகம் செய்தால் என்ன நடக்கும் என்பது சந்திரபாபு நாயுடுவுக்கும் பவன் கல்யாணத்துக்கு நிச்சயம் தெரியும். மேலும் அவர்கள் அதை அனுபவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்