
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தனது 25வது படமான பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் கதை பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 1965 ஆம் வருடம் தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போரில் ஒரு கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். அந்த கல்லூரி மாணவரின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இந்த பராசக்தி படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த மாணவரின் பெயர் ராசேந்திரன் என்றும் அவரது கதாபாத்திரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் படத்தின் முடிவில் சிவகார்த்திகேயன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் காட்சி இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது .