தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தனது மனைவியின் நடிப்பு குறித்து பெருமையாக அபிஷேக் பச்சன் பேசியுள்ளார்.

குறிப்பிடத் தகுந்த படங்களின் மூலம் தமிழிலும் ஆதர்ச நாயகியாக ஐஸ்வர்யா மாறினார். சமீபத்திய நேர்காணலில் அவரது நடிப்பு குறித்து பேசிய கணவர் அபிஷேக், இதுவரை ஐஸ்வர்யாராயின் சிறந்த நடிப்பு எனில் அது பொன்னியின் செல்வனில் தான். நம்ப முடியாத அளவுக்கு நன்றாக நடித்துள்ளார். அவரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.