
சிகரெட் போல வடிவமைக்கப்பட்ட ஒரு முடி கிளிப்பை பயன்படுத்தி அழகாக அலங்கரிக்கும் இளம்பெண்ணின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. Raju Lama Tamang என்ற பயனாளர் இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார். இதில், வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சிகரெட் போல உருவாக்கப்பட்ட கிளிப்பை, அந்த பெண் தனது நேர்த்தியான கூந்தலில் ஸ்டைலாக மாட்டி கொள்கிறார். வழக்கமான கிளிப்புகளைப் பயன்படுத்தாமல், இப்படிப்பட்ட உருவத்தில் இருக்கும் கிளிப் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
View this post on Instagram
இந்த வீடியோ தற்போது வரை 25,000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றிருக்கிறது. இதன் கீழ் பலர் நகைச்சுவையான மற்றும் ரசிக்கத்தக்க கமெண்ட்களுடன் அந்த வீடியோவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.