நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் காஜா. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் காஜா ஆன்லைனில் 1000 ரூபாய்க்கு ட்ரிம்மர் ஆர்டர் செய்துள்ளார். நேற்று அந்த பார்சல் வீட்டிற்கு வந்தது. அந்த பார்சல் எடை அதிகமாக இருந்தது. இதனால் டெலிவரி செய்தவர் முன்னிலையில் ராஜா அந்த பார்சலை திறந்து பார்த்தார்.

அப்போது டிரம்மருக்கு பதிலாக பார்சலில் ஜல்லிகற்கள் இருந்ததை கண்டு காஜா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து டெலிவரி ஊழியரிடம் கேட்டபோது அவர் கண்டுகொள்ளாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் காஜா அந்த பார்சலை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.