மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த மகன்களின் உடல்களை பெற்றார் தங்களது தோள் மீது தூக்கி சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹெரி தாலுகாவை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். காய்ச்சலால் இரண்டு சிறுவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் பெற்றோர் தங்களது இரு மகன்களையும் தூக்கி சென்றனர். ஆனால் சரியான நேரத்தில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் உடல் நலம் மோசமாகி இரண்டு சிறுவர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிறுவர்களின் உடல்களை அவர்களது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல புதிய ஆம்புலன்ஸ் வசதி கூட செய்து கொடுக்கவில்லை. இதனால் அந்த தம்பதியினர் 15 கிலோமீட்டர் தூரம் தங்களது மகன்களின் உடல்களை தோளில் சுமந்தபடி நடந்து சென்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வட்டேட்டியார் அடையாளம் தெரியாத தம்பதியினர் 10 வயது குட்பட்ட இரண்டு சிறுவர்கள் தேவை சுமந்து கொண்டு சேறு நிறைந்த காட்டு பாதையில் நடந்த செல்லும் வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.