நாட்றம்பள்ளி அருகே சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மின்வாரியர் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பத்தில் கயிறு கட்டி அதனை அங்குள்ள உலோக தடுப்பில் இணைத்துள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பு அதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.