
இந்த காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவம் வெளியாகி வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறும். அந்த வகையில் ரெடிட் தளத்தில் ஒரு காணொளி வெளியாகி பார்ப்பதற்கு வேடிக்கையாக அமைந்துள்ளது. சிறுவன் ஒருவன் ஒரு கோழியை பிடித்து வந்துள்ளார். ஆனால் சிறுவனின் கையில் இருந்ததை பார்த்த அவரது தந்தைக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. காரணம் சிறுவன் பிடித்து வந்தது உண்மையில் கோழி கிடையாது.
அது ஒரு பிணம் தின்னி பறவையாகும். சிறுவனின் தந்தை எதற்காக இதைப் பிடித்து வந்தாய் என்று கேட்டபோது அறியா சிறுவன் கோழி என்று கூறியது வேடிக்கையாக அமைந்துள்ளது. சிறுவனின் கையில் இருந்த பிணம் தின்னி பறவையும் சரி சிறுவனும் சரி காணொளியில் அமைதியாக தான் தெரிகிறார்கள் பாவம் சிறுவனின் தந்தை தான் ஒரு நொடியில் பதறிப் போயிருப்பார்.
This kid caught a Vulture thinking it was a chicken.
byu/bugminer innextfuckinglevel