சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இது போன்ற வீடியோக்கள் வேடிக்கையாக இருப்பதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. இந்நிலையில் தாய்மையை உணர்த்தும் வகையில் தன்னுடைய குட்டியை இரண்டு கைகளால் தூக்குகிறது.

அதன் பிறகு அதனை மேலும் கீழுமாக அசைத்து அசைத்து மனிதர்கள் போல விளையாடுகின்றது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரத் தாய்மை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உள்ளது என தெரிகிறது. வீடியோவை பார்த்த இணையவாசிகள் குரங்கின் தாய்மையை பாராட்டியது மட்டுமல்லாமல் மனிதர்களை விட விலங்குகளின் அன்பில் உண்மை உள்ளது எனவும் கூறி வருகிறார்கள்.