இன்று துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன . 2023 ODI உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு நட்சத்திர அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.  சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவை விட முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்த சர்ச்சைக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். அதில், அரையிறுதியில் எந்த Pitch-ல் விளையாட போகிறோம் என எங்களுக்கே தெரியாது. இந்த மைதானம் எங்களுக்கு புதிதுதான். நாங்கள் இங்கு நிறைய போட்டிகள் விளையாடியதில்லை. இது துபாய்.. இது எங்கள் வீடு கிடையாது” என்று பேசி உள்ளார்.