
துபாயில் நடைபெற்ற குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சியில் ஷாருக்கான் பங்கேற்று இருந்தார். அப்போது அவர் தென் இந்திய நடிகர்கள் குறித்து பேசி இருந்தார். அது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளதுஸ்ரீ அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது “எனக்கு தென்னிந்தியாவில் அதிக நண்பர்கள் இருக்கின்றனர்.
ரஜினி சார், கமல் சார், அல்லு அர்ஜுன், பிரபாஸ், மகேஷ்பாபு, ராம் சரண், விஜய் ஆகியோரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வளவு வேகமாக நடனம் ஆடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து போட்டி போட்டு நடனம் ஆடுவது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.