இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் பல சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் தனித்தனியான ஃபோன்களில் சிம் கார்டுகளை பயன்படுத்தினாலும் அதிகமானோர் ஒரே மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள்.  அதே சம்பவம் ஒருவர் பெயரில் பல சிம் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளது.

புதிய தொலைதொடர்பு சட்டத்தில் ஒருவர் பெயரில் 9 சிம்கார்டுக்கு மேல் இருந்தால் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம், வேறு ஒருவர் பெயரில் சிம் கார்டு பயன்படுத்தினால் 50 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலில் இருப்பதால் தேவையில்லாத சிம்மை துண்டிப்பது நல்லது. மொபைலில் இருந்து 198 என்ற எண்ணில் பேசி கோரிக்கை வைத்தால் தேவையில்லாத எண் துண்டிக்கப்பட்டு விடும்.