இத்தாலியில் இந்திய விவசாய தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சத்னம் சிங்(31) என்ற விவசாயி அக்ரோ பாண்டினோ என்ற கிராமப் பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகின்றார்.

இந்த நிலையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவருடைய கையில் கட்டிங் மெஷின் பட்டு கைதுண்டானது. இதனால் அலறி துடித்த அவரை உடனே ரோம் நகரில் உள்ள மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலி பிரதமர் பதிலளித்துள்ளார்.