
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சிகந்தரபாத் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு இருவர் பெட்ரோல் போடுவதற்காக சென்ற நிலையில் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வேண்டும் என்று கேட்டனர். அதாவது அவர்கள் முதலில் பைக்கில் பெட்ரோல் போட சென்ற நிலையில் நிரம்பிய பிறகு பின்னர் பிளாஸ்டிக் பாட்டிலில் வேண்டுமென்று கேட்டனர். ஆனால் அதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்த நிலையில் மேனேஜர் சொன்னால் போடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் அவர்கள் மேனேஜரை சென்று பார்த்தனர். ஆனால் மேனேஜரும் பாட்டிலில் பெட்ரோல் போட முடியாது என்று கூறிவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோபத்தில் அந்த நபர்கள் மேனேஜரை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் ஊழியர்கள் மேனேஜரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து விசாரித்து வருகிறார்கள்.