இட ஒதுக்கீட்டை எதிரான போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. அவசர உதவி ஏதாவது தேவைப்பட்டால் 8801958383679/80, 8810937400591 ஆகிய தொலைபேசி உதவி எண்கள் மூலமாக தலைநகர் தாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.