தமிழக அரசியல் களத்தில் கல்வி முறை குறித்த விவாதங்கள் தொடர்ந்து வெடித்து வருகின்றன. இந்த விவாதங்களில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், தமிழகத்தின் கல்வி முறை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்றும், இது மாணவர்களின் சுய சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் உள்ளது என்றும் தெளிவாகக் கூறினார்.

தமிழ்நாட்டின் கல்வி முறை ஏன், எதற்கு என்ற கேள்விகளை எழுப்பி, மாணவர்களை ஆழமாக சிந்திக்க வைக்கிறது. இது மாணவர்களின் சுய அடையாளத்தை வலுப்படுத்தி, அவர்களின் திறன்களை மேம்படுத்துகிறது.மேலும் , தமிழகத்தின் கல்வி முறையை விமர்சிப்பது நமது மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவமதிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்