தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஜெய பிரதீப். தற்போது இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, அதிமுக கட்சியை ஒரு நல்ல நோக்கத்திற்காக கொண்டு போக கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தனக்கு மேல் செல்வாக்கு உள்ள தலைவர்களை நீக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்பட்டார். அதேபோன்று யார் கட்சியில் சுயமாக சிந்தித்து செயல்பட்டாலும் சரி தவறு என்று யார் பேசினாலும் அவர்களையும் கட்சியிலிருந்து நீக்கினார். இதன் காரணமாக நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சில தலைவர்கள் வேறு கட்சிக்கு மாறிவிட்டனர். சில தலைவர்கள் எதையுமே கண்டுகொள்ளாமல் அதிமுகவில் அமைதியாக ஒதுங்கிக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமியின் இதுபோன்ற செயல்களால் தற்போது அதிமுக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்று 18 வருடங்களாக அவர் ஒரு கடுஞ்சொல் கூட சொல்லாத அளவுக்கு கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் நம்பிக்கை நாயகனாக  ஐயா ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் திகழ்ந்தார்.

ஜெயலலிதா அம்மையார் எந்த முடிவு எடுத்தாலும் அப்பாவிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகு தான் எடுப்பார். அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரிய அப்பாவை தேவையில்லாமல் தொண்டர்கள் மத்தியில் பொய் தகவல்களை பரப்பி கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி முழு நேரமும் சொந்த கட்சிக்காரர்களை எப்படி காலி செய்ய முடியும் என்பதை மட்டும் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். நம்சகோதரர்களுக்குள் பிரிவினை வாதத்தை கொண்டு வந்து அவர்களை கட்சிப் பணி செய்ய விடாமல் முடக்கி போட்டதால் அதிமுக அதாள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மேலும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் 10 வருடங்களாக முடங்கி கிடந்த திமுக தற்போது இந்தியாவிலேயே முதன்மையான கட்சியாக உருவாகி கொண்டு இருக்கிறது என்று கூறினார்.