
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு வருகின்ற 22ஆம் தேதி 50 வது பிறந்தநாள் வருகிறது. நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தளபதி 69 படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த 6 படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதன்படி மெர்சல், கத்தி, துப்பாக்கி, போக்கிரி, மாஸ்டர் ஆகிய படங்கள் வெளியாகும் நிலையில் ஏற்கனவே ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படமும் ஒரு சில திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. மேலும் ஒரு நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒரே நாளில் 6 படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது இந்தியாவிலேயே இது முதல் முறையாகும். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.