இந்தியாவின் சர்வதேச தளத்திற்கு ஈடாக மருந்து ஒழுங்குமுறை தரநிலைகள் இருக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் சர்வதேச ஒத்திசைவு வழிகாட்டுதல்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் எனவும் இந்தியாவில் மருத்துவ சாதனங்களை ஒழுங்குமுறை படுத்துவதற்கு என்று தனியாக ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. புதிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் மசோதா 2023 மீது அமைச்சகங்களுக்கு இடையே நடந்து வருகின்ற கலந்த ஆலோசனையின் போது இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது