
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனால் பல சிக்கல்களும் ஏற்படுகின்றன. பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் சில வெளிநாடுகளில் செல்போன் மற்றும் தரைவழி தொலைபேசி எண்ணுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவில் பேன்சி எண்ணுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் எண்ணுக்கு கட்டணம் வசூலிக்கவும் பயன்படுத்தப்படாத எண்ணை துண்டிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது. இது அமலானால் மக்கள் தங்கள் பயன்படுத்தும் எண்ணுக்கு கட்டணம் செலுத்தும் நிலை வரும்.