
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதோ பதிலளித்தார். அவர் இந்தியாவில் தினசரி புற்றுநோயினால் 323 பேர் பலியாவதாக கூறினார். அதாவது கடந்த வருடத்தில் மட்டும் தினசரி மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோயினால் பெண்கள் 323 பேர் உயிரிழந்துள்ளனர்.
புற்றுநோய் பாதிப்பினால் கடந்த 2022 ஆம் ஆண்டு பலி எண்ணிக்கை 1,14,896 ஆக இருந்தது. ஆனால் கடந்த வருடம் பலி எண்ணிக்கையானது 1,18,120 ஆக உயர்ந்தது. மேலும் கடந்த வருடத்தில் மார்பக புற்று நோயினால் 82,429 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று கர்ப்பப்பை வாய் புற்று நோயினால் 25691 பெண்கள் உயிரிழந்தனர் என்று கூறினார்.