காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு இருக்கும் என்று கூறப்படுவதால் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு விசாவினையும் நிறுத்தி வைத்தது. அதோடு பாகிஸ்தான் கடற்பரப்பில் ஏவுகணை சோதனை செய்து வருவதால் இந்தியாவும் பதிலடியாக ஏவுகணை சோதனை செய்து வருகிறது.

அதோடு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டுள்ளதோடு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து தற்போது நதிநீரை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் தற்போது இந்தியாவுடன் அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளதோடு இனி வர்த்தக உறவுகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதோடு சிந்து நதிநீர் தங்களுக்கு சொந்தம் என்று பாகிஸ்தான் கூறுவதோடு இதற்காக சர்வதேச நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ராணுவத்தை தயார் நிலையில் இருக்க பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது அதேபோன்று பாகிஸ்தானும் வான் பரப்பை மூடியுள்ளது. இந்தியர்களுக்கு சொந்தமான மற்றும் இந்தியர்களால் இயக்கப்படும் விமானங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பாகிஸ்தான் நிறுத்திவிட்டது. அதாவது காஷ்மீர் விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று கடந்த 1972 ஆம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானும் தற்போது அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.