குவைத் நாட்டிலுள்ள மங்காப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 49 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் விவரங்கள் தெரிய வந்த பிறகு அவர்களின் உடல்கள் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ செலவை தமிழக அரசு முழுமையாக இருக்கும் என்று தற்போது அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த தமிழர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.