டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 16வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 6 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.‌ இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்கு பாகிஸ்தான் நாட்டின் ரசிகர் ஒருவர் வந்திருந்தார். அவர் தன்னுடைய டிராக்டரை விற்று  போட்டியை காண வந்துள்ளார்.

ஆனால் அந்த போட்டியை பார்த்து மிகவும் மனம் உடைந்ததாக அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது 3000 டாலர் மதிப்புள்ள டிக்கெட்டை வாங்குவதற்காக அவர் தன் டிராக்டரை விற்றுள்ளார். முதலில் ஆடிய இந்தியாவின் ஸ்கோரை பார்க்கும்போது நாங்கள் தோல்வி அடைவோம் என்று நினைக்கவில்லை. ஆனால் பாபர் அசாம் ஆட்டம் இழந்ததால் மனம் உடைந்து விட்டோம். மேலும் இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.