இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதனால் தற்போது புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது முன்னால் இந்திய கிரிக்கெட் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பிசிசிஐயிடம் கம்பீர் அதிக அளவு கோரிக்கைகள் வைப்பதால் அவருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மனை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கம்பீருடன் மற்றொரு இந்திய இந்திய முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மணும் தலைமை பயிற்சியாளர் போட்டியில் இணைந்துள்ள நிலையில் டி20 உலக கோப்பை முடிவடைந்த பிறகு தலைமை பயிற்சிளர் யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.