
அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆராய்ச்சி மாணவர் பதார் கான் சுரி படித்து வருகிறார். அவரை அமெரிக்க குடியுரிமை பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சமூக ஊடகங்களில் ஹமாஸ் பிரச்சாரம் மற்றும் யூத விரோத கருத்துகளை பரப்பியதாகக் குற்றம் சாட்டி கைது செய்துள்ளனர். அவருக்கு ஹமாஸ் இயக்கத்தின் மூத்த ஆலோசகருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் அதிகாரிகள் கான் சுரியின் விசாவை ரத்து செய்தனர். இந்த நிலையில் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், கான் சுரி எந்த சட்டவிரோத செயல்பாட்டிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை என கூறியுள்ளது. மேலும் சட்ட அமைப்பு இந்த வழக்கை நியாயமாக விசாரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக பல்கலை கழக நிர்வாகிகள் கூறியுள்ளனர். .