நாடு முழுவதும் இளைஞர்களை வேலைக்கு சேர்ப்பதில் அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இளைஞர்கள் அனைவரும் ராணுவத்தில் வேலை வழங்கும் நோக்கமாக பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படை அக்கினி வீர்வாயு நியமன முறையில் 4 வருடங்கள் ராணுவத்தில் வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் இந்திய விமானப்படையில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் ஜனவரி 2024 ஆம் ஆண்டு முதல் சேர இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு ஆன்லைன் பதிவு நேற்று முதல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வரை முடிவடைகிறது எனவே இளைஞர்கள் அனைவரும் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.