கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் உபயோகிப்பதை குறைப்பதற்காக கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே முதற்கட்ட நடவடிக்கையாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை உபயோகிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளாக இருக்கும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் உபயோகிக்க உரிமம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், அவற்றில் எந்தவித கழிவுகளையும் போடுவதற்கு ரயில்வே ஊழியர்கள் அனுமதிக்க கூடாது எனவும் கேரள நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் பாட்டில்கள் உபயோகிப்பது நல்லது எனவும் கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.